Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

February 6, 2018 1:42 PM
8 0

நாட்டில் ஒன்றையாட்சி பற்றி பேசும் அனைவரும் மேலோட்டமாக ஒற்றையாட்சி பற்றி பேசினாலும் உள்ளுக்குள் நாட்டை பிரிக்கும் விடயங்களை உள்ளடக்கிக் கொண்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட குரே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

உதாரணமாக ஒரு அரசியல் கட்சி நாட்டின் ஒரு பகுதியை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துமாயின் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் பிறப்பிலேயே நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் நபர்கள்.

தேசிய அரசியல் கட்சியாக இருந்தால் நாட்டின் நான்கு திசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

தமிழ், முஸ்லிம், சிங்களம், இந்து, பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் என அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருக்க வேண்டும்.

இம்முறை ஸ்ரீலங்கா தேசிய கட்சியாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தேர்தலில் போட்டியிடுகின்றது.

நாட்டில் 341 உள்ளூராட்சி சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி.

நாட்டின் நாற்திசையிலும் உள்ள அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் நவீன கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மாறியுள்ளது எனவும் ரொஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0