ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையிலான நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்து செல்கின்றன. அதாவது இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அமைத்த நல்லாட்சி அரசாங்கத்திற்குள் தற்போதைய நிலைமையில் பாரிய நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.
அமைச்சர்களும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும் பாரியளவில் கடும் விமர்சனங்களை முன்வவைத்து வருகின்றனர்.
குறிப்பாக நேற்றுமுன்தினம் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ ஜனாதிபதியை விமர்சித்து பேசியிருந்தார். அதேபோன்று இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஜனாதிபதி மீது விமர்சனங்கைள முன்வைத்திருந்தார். அதேவேளை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தனர். இந் நிலையிலேயே சுதந்திரக் கட்சி நல்லாட்சியிலிருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஆரம்பமான நல்லாட்சி தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் இவ் வருடம் செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. எனினும் அது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் இணங்கின. தற்போது டிசம்பர் 31 ஆம் திகதியும் கடந்துள்ள நிலையில் தேர்தல் முடியும்வரை புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதற்கு இரண்டு கட்சிகளும் இணங்கின. எனினும் தற்போது இரண்டு கட்சிகளுக்குமிடையில் நெருக்கடி பாரியளவில் அதிகரித்து செல்கின்றன.
ஆதாரம்: athirady.com