Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

நடிகர் விஷால், ஜெ.தீபா வேட்புமனு நிராகரிப்பு!

December 5, 2017 12:42 PM
2 0
நடிகர் விஷால், ஜெ.தீபா வேட்புமனு நிராகரிப்பு!

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மற்றும் நடிகர் விஷால் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

தீபா தாக்கல் செய்த வேட்பு மனுவில் படிவம் 26-ல் சொத்துக்கள் மற்றும் வழக்குகள் தொடர்பான தகவல்களை நிரப்பாமல் விட்டதே காரணம் என கூறப்படுகிறது.

இதேபோன்று நடிகர் விஷாலுக்கு முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதான சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் இழுபறி நீடித்து வந்தது . விஷால் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என அதிமுக, திமுக வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை ஆர்.கே.நகரில் டிசம்பர் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. 131 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0