Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

துஷ்பிரயோக வழக்கின் சந்தேகநபர் வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காமையால் கைது

June 12, 2018 7:24 AM
2 0

திருகோணமலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் இரு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் இரு வழக்கு தவணைகளுக்கு சமூகமளிக்காமையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை, அபயபுர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் திருகோணமலை பகுதியில் இரு சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சந்தேகநபருக்கு எதிராக பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலே இரண்டு வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0