Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தெலுங்கானா சட்டசபை தேர்தல் – மஜ்லிஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு..!!

September 11, 2018 2:05 PM
7 0

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அம்மாநில முதல்மந்திரி சந்திரசேகர ராவ் அமைச்சரவையை கலைத்தார். இதன்மூலம் தெலுங்கானா மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுடன் தெலுங்கானாவுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது தனித்து தேர்தல் நடைபெறுமா? என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஜ்லிஸ் இ இட்டேஹாத் அல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இன்று தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இக்கட்சியின் தலைவர் அசாடுதீன் ஒவைசியின் தம்பி அக்பருதீன் ஒவைசி உட்பட 7 வேட்பாளர்களை முதற்கட்டமாக மஜ்லீஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0