Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா: பெயர்ப் பலகையை பிடுங்கி எறிந்த மர்மநபர்கள்

December 5, 2017 6:05 AM
2 0
துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா: பெயர்ப் பலகையை பிடுங்கி எறிந்த மர்மநபர்கள்

மாவீரர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்ட கிளிநொச்சி- கனகபுரம் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த தாவரவியல் பூங்கா என்ற பெயர்ப்பலகை இனந்தெரியாதவர்களால் தேசமாக்கப்பட்டுள்ளது.

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கரைச்சி பிரதேச சபையினால் நேற்று இந்த பெயர்ப் பலகை போடப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவே இது சேதமாக்கப்பட்டு, பிடுங்கி எறியப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக தாவரவியல் பூங்கா எனும் பெயர்ப் பலகை கரைச்சி பிரதேச சபையினால் நடப்பட்டது.

குறித்த மாவீரர் துயிலுமில்லத்தில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனினால் 10 லட்சம் ரூபா பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0