Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

த.தே.கூ கையை மீறி போகும் நிலை காணப்பட்டதாலேயே தவிசாளர் பதவியை கைப்பற்றினோம்- வன்னி பாராளுமன்ற உறுப்பினர்..!!

April 17, 2018 11:21 AM
5 0

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் பதவி த.தே.கூட்டமைப்பின் கையை மீறி போகும் நிலை காணப்பட்டதாலேயே த.வி.கூட்டணியானது தவிசாளர் பதவியை கைப்பற்றியது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியை கைப்பற்றியமை தொடர்பாக நேற்றைய தினம் (16) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா நகரசபைக்கான தவிசாளர் தெரிவு தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக கட்சிகளின் நகர்வுகளை அவதானித்து ஒவ்வொரு கட்சிகளும் பெற்றிருக்க கூடிய ஆசனங்களை சரியான முறையில் கணிப்பீடு செய்து பார்த்ததில் நாங்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டது.

கட்சியின் தீர்மானத்தின்படி த.வி.கூட்டணி நடுநிலை வகித்திருந்தால் வவுனியா நகரசபையின் தவிசாளர் பதவியானது வேறு ஒரு கட்சிக்கு சென்றிருக்கும் அத்துடன் நாங்கள் நடு நிலை வகித்த காரணத்தினால் தான் தவிசாளர் பதவியானது கிடைக்காமல் போனது என்ற குற்றச்சாட்டிற்கு நாங்கள் ஆளாக நேரிடும் எனவே மிகவும் அவதானமாக பலதரப்பட்டவர்களின் கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்ததன் அடிப்படையிலேயே த.வி.கூட்டணி இந்த முடிவை எடுத்திருந்தது என தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0