Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தமிழ் மக்களுக்கு வாக்குரிமை, ஜனநாயக உரிமை என்பவற்றை பெற்று தந்தவர் மஹிந்த

November 28, 2017 12:36 PM
1 0

தமிழ் மக்களுக்கு வாக்குரிமை மற்றும் ஜனநாயக உரிமை என்பவற்றை மஹிந்த ராஜபக்‌ஷவே பெற்றுக் கொடுத்தாக கோத்தபாய ராஜபக்‌ஷ ​தெரிவித்துள்ளார்.

''எளிய'' அமைப்பின் அநுராதபுர மாவட்ட கலந்துரையாடலில் பங்கெடுத்து கருத்து வௌியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், வடக்கு மற்றும் கிழக்கில் நிலவிய யுத்தம் காரணமாக அங்குள்ள மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன.

பயங்கரவாதத்தை முறியடித்ததன் ஊடாக அந்த நிலைமையை மாற்றியமைத்து வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமை மற்றும் வாக்குரிமையை பெற்றுக் கொடுத்ததுடன், அவர்கள் தங்களைத் தாங்களே ஆளும் உரிமையையும் மஹிந்த ராஜபக்‌ஷ ​பெற்றுக் கொடுத்தார்.

அந்த வகையில் இந்நாட்டில் உண்மையான நல்லிணத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0