Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க கூடிய ஒரே கட்சி ஐ. தே. க, முகாமையாளர் தெரிவிப்பு…!!

February 6, 2018 8:58 AM
10 0

தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடு;க்க கூடிய ஒரே ஒரு கட்சியாக ஐக்கிய தேசிய கட்சி இருக்கிறது என வவுனியா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் கே.கே. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே சந்திரகுமார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய உரிமையை தமிழ் மக்களின் தேசியக் கட்சிகளுடன் சேர்ந்து பெற்றுத்தரக்கூடிய ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி இருக்கிறது. ஆகவே நீங்கள் ஐக்கிய தேசியக்கட்சியை பலப்படுத்த வேண்டும். அதன் மூலம் எமது ஐக்கிய தேசியக் கட்ச்pயின் தலைமையிடம் உரிமையுடன் பேச முடியும்.

வடக்கிலே ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது. அபிவிருத்தியை மாத்திரமல்ல தமிழ் மக்களின் உரிமையை கூட பெற்றுக்கொடுக்க கூடிய கட்சி ஐக்கிய தேசிய கட்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0