Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தமிழரசுக் கட்சி பெண் வேட்பாளருக்கு ஐ.தே.க வேட்பாளர் அச்சுறுத்தல்

February 10, 2018 7:43 AM
3 0
தமிழரசுக் கட்சி பெண் வேட்பாளருக்கு ஐ.தே.க வேட்பாளர் அச்சுறுத்தல்

வவுனியா - கற்குளியை சேர்ந்த தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

உறவினர்களை அழைத்துக் கொண்டு வாக்களிக்க சென்ற வேளை எனது வீட்டிற்கு அருகாமையில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தார்.

அத்துடன் தகாத வார்த்தைகளையும் பிரயோகித்தார். ஏற்கனவே மாற்று கட்சியினரால் எனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ள சென்ற நிலையில் எனது முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0