Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தம்புள்ளை சென்ற யாழ் விவசாயிகளுக்கு நேர்ந்த அசௌகரியம்

February 8, 2018 1:56 PM
9 0

யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படும் உருளை கிழங்கை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வந்த போதிலும் ஒரு கிலோ கிழங்கை 50 ரூபாவுக்கு கூட விற்பனை செய்துக்கொள்ள முடியவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த உருளை கிழங்கு கிலோ 36 ரூபா முதல் 40 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், தாம் விளைவித்த உருளை கிழங்கை 50 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ். விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது உருளை கிழங்கு பெருமளவில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடையில் 80 வீதத்தை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு கிலோ உருளை கிழங்கை அறுவடை செய்ய 100 ரூபா செலவாவதாகவும் போக்குவரத்துக்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தாம் கொண்டு வந்த உருளை கிழங்கை கிலோ 50 ரூபாவுக்கும் விற்பனை செய்ய முடியாத காரணத்தினால், விவசாயிகள் சில தினங்கள் தம்புள்ளையில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தம்மிடம் 50 ரூபாவுக்கும் குறைவாக பெற்றுக்கொள்ளும் உருளை கிழங்கு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வெளியில் சில்லறை கடைகளில் தமக்கு எதிரிலேயே 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக யாழ் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0