Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

தமன்னா – ரெஜினா கூட்டணியில் தேவி ஸ்ரீ பிரசாத்..!!

June 12, 2018 6:15 AM
3 0

தமிழ்த் திரையுலகைவிட தெலுங்கில் பரபரப்பாக இயங்கிவருகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி ஸ்கொயர் படத்துக்கு இசையமைத்துவரும் இவர் தெலுங்கில் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழ்த் திரையுலகில் குறிப்பிட்ட இயக்குநர்கள், நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகும் தேவி ஸ்ரீ பிரசாத், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். அறிமுக நாயகர்களின் படங்களில் இருந்து முன்னணி நாயகர்களின் படங்கள் வரை தொடர்ந்து ஒப்பந்தமாவதால் ஆண்டுக்குக் குறைந்தது ஐந்திலிருந்து ஆறு படங்கள் வரை பணியாற்றுகிறார்.

ராம் சரண், சமந்தா நடிப்பில் வெளியான ‘ரங்கஸ்தலம்’, மகேஷ் பாபு நடித்த ‘பாரத் அனே நேனு’ என இந்த ஆண்டு இவரது இசையில் தெலுங்கில் வெளியான இரு படங்களும் வரவேற்பு பெற்றுள்ளன. இந்த நிலையில் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கும் ‘எஃப் 2’ (F2: Fun & Frustration) என்ற புதிய படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றவுள்ளார்.

முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் நகைச்சுவை கலந்து தயாராகவுள்ள இந்தப் படத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ் இணைந்து நடிக்கின்றனர். தமன்னா, ரெஜினா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0