Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

டிச.31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!! (வீடியோ)

November 21, 2017 12:39 PM
2 0

ஜெயலலிதா மரணம் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டது.

இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலை தலைமை தேர்தல் கமி‌ஷன் ரத்து செய்தது.

ஆர்.கே.நகரில் மீண்டும் ஆய்வு செய்த பிறகே தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.நகரில் டிசம்பர் 31-ந்தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘இந்த தொகுதியில் போலி வாக்காளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றுள்ளனர். போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அதேபோல, ஓட்டுக்காக பணம் கொடுத்தவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மருதுகணேசும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நிரஞ்சன், ‘ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர் பட்டியலில் உள்ள போலி வாக்காளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர்’ என்று கூறினார். அதோடு அதுதொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘ஆர்.கே.நகர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடைபெறும்? ஏற்கனவே டிசம்பர் 31-ந் தேதிக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோமே?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த வக்கீல் நிரஞ்சன், ‘டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையும் வருகிறது. இந்த பண்டிகை காலங்களை பயன்படுத்தி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பார்கள். இதை தடுப்பது கடினம். அதனால், டிசம்பர் 31-ந் தேதிக்கு பின்னர் தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

‘ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி ஆர்.கே.நகர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஓர் ஆண்டு இந்த தொகுதி காலியாகவே இருந்து வருகிறது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஓர் ஆண்டாக ஒரு தொகுதியை வைத்திருக்க முடியாது.

இந்த வி‌ஷயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்ய முடியாது. ஏற்கனவே, நாங்கள் பிறப்பித்த உத்தரவின் படி, வருகிற டிசம்பர் 31-ந் தேதிக்குள் ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0