Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

டெங்குதாக்கத்தால் கடந்தவருடம் 596 பேர் பாதிப்பு!! இருவர் மரணம்!!

January 12, 2019 4:37 PM
63 0

வவுனியா மாவட்டத்தில் கடந்தவருடம் 596 டெங்குநோயாளர்கள் இனம்காணபட்டுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்றுநோய் தடுப்புபிரிவின் வைத்திய அதிகாரி யூட்பீரிஸ் தெரிவித்தார்.

வவுனியாவில் கடந்தவருடம் டெங்குநோயின் தாக்கம் தொடர்பாக கேட்டபோதே மேற்படிதெரிவித்தார். மேலும் தெரிவித்த அவர் வவுனியா சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் அதிகபட்சமாக 405 நோயாளர்களும், செட்டிகுளம் சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 107 நோயாளர்களும்,வவுனியா வடக்கு சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 36 நோயாளர்களும்,வவுனியா தெற்கு சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவில் 48 நோயாளர்களும் இனம்காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் டெங்குநோய்தாக்கத்தின் மூலம் வவுனியாவைசேர்ந்த இரண்டுபேர் கடந்தவருடம் மரணித்துள்ளனர். ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தநிலையில் சாவடைந்திருந்ததுடன், இன்னுமொருவர் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்தநிலையில் சாவடைந்ததாகவும் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் டெங்குநோயை கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு சுகாதாரவைத்திய அதிகாரிபிரிவுகளிலும் உள்ள பொதுமக்களின் கிணறுகளில் டெங்குகொசுவை அழிக்கும் மீன்கள் விடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0