Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

டோக்கியோவில் ஜனாதிபதியின் கூட்டத்தில் ஞானசார தேரர்

March 14, 2018 5:08 PM
9 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் உள்ள இலங்கையர்களுக்கும் இடையில் நேற்று மாலை நடந்த சந்திப்பில் கலகொட அத்தே ஞானசார தேரரும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் அண்மையில் இணைந்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பியசிறி விஜேநாயக்க, சோமவீர சந்திரசிறி ஆகியோரும் ஜனாதிபதியுடன் ஜப்பான் சென்றுள்ளனர்.

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை அடுத்து ஞானசார தேரர் , பியசிறி விஜேநாயக்க, சோமசிறி சந்திரசிறி போன்ற இனவாத கொள்கை கொண்டவர்கள், ஜனாதிபதியுடன் ஜப்பான் சென்றுள்ளமை கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஒரு மெகா அணியை தன்னுடன் அழைத்துச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பிரசாரங்களில் போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0