Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்!பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அஞ்சலி

December 5, 2017 6:18 AM
2 0
ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவு தினம்!பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அஞ்சலி

ஜெயலலிதா முதலாம் ஆண்டு நினைவுதினம்..!பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் அஞ்சலி..!

ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கபடுவதை முன்னிட்டு ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் என்பதால் வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மெரீனா கடற்கரையில் குவிந்துள்ளனர்.

சென்னை அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திரண்டு வருமாறு அதிமுகவினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர். காலை 9 மணிக்கு அரசு சார்பில் பேரணி நடைபெற உள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0