Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் கொழும்பில் இன்று முக்கிய பேச்சு…!!

February 15, 2018 6:22 AM
2 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்புக்கு அழைத்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட வெற்றி,தோல்வி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதா? இல்லையா? என்ற விடயம் குறித்தும் இன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என்றும் சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0