Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஜனாதிபதி மைத்திரிக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு

July 13, 2017 10:37 AM
3 0
ஜனாதிபதி மைத்திரிக்கு பங்களாதேஷில் அமோக வரவேற்பு

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஷீனா அம்மையாரின் அழைப்பின் அடிப்படையில் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் பங்களாதேஷ் - டாக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் பங்களாதேஷிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பதனால், அவருக்குக் கோலாகலமான வரவேற்பை அளிப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

டாக்கா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பங்களாதேஷின் ஜனாதிபதி மொஹமட் அப்துல் ஹமீட் மிகவும் சிநேகபூர்வமாக வரவேற்றுள்ளதுடன், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்புடனான வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், நிதி அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட மக்கள் பிரதிநிதிகளும் மைத்திரி பால சிறிசேனவை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இந்தப் பயணத்தில் ஜனாதிபதி மைத்திரியுடன் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் லால் கிரேரு, வசந்த அலுவிகார, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, நிஷாந்த முதுஹெட்டிகம ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0