Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னரே அவசரகால நிலை நீக்கம்!

March 13, 2018 12:42 AM
18 0

ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியபின்னரே அவசரகால நிலை நீக்கம் குறித்து முடிவெடுக்கப்படும் என சட்டம் ஒழுங்குகள்அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற வன்முறை காரணமாக கடந்த 6 ஆம் திகதியன்று ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேனவினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமைக்கு பின்னர் அவசரகால நிலையை நீடிக்க அவசியமில்லைஎன்று சட்டம் ஒழுங்குகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி, அங்கிருந்து கடந்த12 ஆம் திகதி ஜப்பானுக்கு பயணம் செய்தார்.

அவர் எதிர்வரும் 17 ஆம் திகதிசனிக்கிழமை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0