Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை. மைத்திரி…!!

March 13, 2018 7:33 AM
8 0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போதைக்கு சிந்திக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதாக உள்ள்கத் தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வு ஒன்றை காணும் விடயத்தில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கம் நிலையில், 2020ஆம் ஆண்டு நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து சிந்திக்க நேரம் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசிசேன தனக்கு நெருக்கமான ஒருவரிடம் கூறியதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார் என்று ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுநத்திரக் கட்சி தனித்து ஆட்சி அமைக்கும் முயற்சி வெற்றியளித்த பின்னர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிந்திக்க முடியும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக யாரை நியமிப்பது என்பது குறித்து இதுவரை கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கவில்லையெனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக உள்ளகத் தக்வல்கள் கூறுகின்றன.

அதேவேளை மஹிந்த ராஜபக்ச அணியுடன் இணைந்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை தனது தலைமையின் கீழான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைக்கும் முயற்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0