Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

சர்வதேச பொலிஸாரின் பிடியில் மகிந்தவின் நெருங்கிய உறவினர்! துபாய் விரையும் விசாரணை குழு

February 6, 2018 9:41 PM
13 0

துபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க 7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நாளை துபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

மிக் தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் நிதி மோசடி நடந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கலுடன் உதயங்க வீரதுங்கவும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதயங்க வீரதுங்கவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவுக்கு செல்லும் நோக்கில் துபாய் விமானநிலையம் சென்றிருந்த அவரை சர்வதேச பொலிஸார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க 7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நாளை துபாய் நோக்கி பயணிக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உதயங்க வீரதுங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0