Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

சர்ச்சையை ஏற்படுத்திய திருமணம்: சட்டமா அதிபரிடம் விசாரணை அறிக்கை

November 28, 2017 6:46 AM
1 0

திருமண நிகழ்வு ஒன்றில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக பாடசாலை மாணவர்களை பயன்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாக இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்துள்ளது.

தொடர்ந்து விசாரணையின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க குற்றவியல் பிரிவிற்கு உட்பட்டதான 308ஆவது சரத்து (அ) அமைவாக வழக்கு தொடரக்கூடியமை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக இது தொடர்பிலான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கண்டி கண்ணுருவ என்ற இடத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் கின்னஸ் சாதனை படைப்பதற்காக, பாடசாலை மாணவர்கள் 250 பேரை பயன்படுத்தி மணமகளின் சேலையை ஏந்திக்கொண்டு வீதியில் நிற்கவைத்து, அந்த மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0