Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

சபையில் தவிசாளரின் செயற்பாட்டை விமர்சித்த உறுப்பினரை வெளியேற்றிய தவிசாளர்..!! (படங்கள்)

June 12, 2018 1:15 PM
10 0
சபையில் தவிசாளரின் செயற்பாட்டை விமர்சித்த உறுப்பினரை வெளியேற்றிய தவிசாளர்..!! (படங்கள்)

கரைச்சி பிரதேச சபையின் நான்காவது அமர்வு இன்று(12) தவிசாளர் அ. வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது.

காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமான சபை அமர்வின் போது தவிசாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கடந்த அமர்வின் அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன் போது எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து எதிர் தரப்பு உறுப்பினர் ஒருவரை சபையிலிருந்து ஒரு மணித்தியாலயத்திற்கு வெளியேற்றி சபை மண்டபத்தின் கதவினை மூடிவிட்டார் தவிசாளர்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காது வேறுவிடயங்களுக்கு சபையினை கொண்டு செல்ல முற்பட்ட போது அதற்கு இடமளிக்காது எதிர்தரப்பினர் தங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு வலியுறுத்தினார்கள் இதன் போது எழுந்த சர்ச்சையினை தொடர்ந்து எதிர்தரப்பு உறுப்பினர் ஒருவரை தவிசாளர் ஒரு மணித்தியாலயத்திற்கு சபையிலிருந்து வெளியேற்றினார். இதன் போது கடும் வாக்கு வாக்குவாதத்தில் இரு தரப்பின்னர்களும் ஈடுப்பட்ட போது தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சத்தியானந்தன் போனஸ் உறுப்பினர்கள் வாயை மூடிக்கொண்டு வெளியே செல்லுங்கள் என கூறிய போது சபையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

பின்னர் எதிர்தரப்பில் உள்ள சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 11 பேரும் வெளியேறி சென்று ஒரு மணித்தியாலயத்திற்கு பின்னர் மீண்டும் சபையில் வந்து அமர்ந்துகொண்டனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0