Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கிளிநொச்சியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

March 14, 2018 3:47 PM
29 0
கிளிநொச்சியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இன்றைய தினம் புதிய பொலிஸ் நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ கிளிநொச்சி முல்லைத்தீவிற்கான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிகன்ன மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் ஆகியோரால் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையமானது யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றப்பட்டதில் இருந்து பொலிஸ் காவலரணாக இயங்கி வந்த நிலையில், சிறந்த சேவையின் காரணமாக தற்போது பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

அக்கராயன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக எம்.எம்.டி.என் சத்துரங்க, பொலிஸ் தலைமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இவர் கடந்த காலத்தில் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0