Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளரின் அசமந்த போக்கு

March 14, 2018 1:22 PM
10 0

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரிடம் சேவைகளை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

கரைச்சி பிரதேச செயலாளரிடம் காணி பிணக்கு , பிரதேச செயலகத்தில் ஏற்பட்ட தவறுகளை தெரிவிக்கும் போது அலட்சிய போக்காக இன்று சென்று நாளை வா என பல தடவைகள் பதிலளிப்பதாகவும் தாங்கள் தங்களுடைய பணிகளை விடுத்து பிரதேச செயலகத்திற்கு தினசரி செல்ல வேண்டியுள்ளதாகவும் முதியவர்கள் , நோயாளிகள் என்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள மக்களை அசோகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அரச உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.

எனது காணிக்கு சுற்றுமதில் அமைப்பதற்கு அனுமதி கோரினால் தற்போது உங்களுக்கு தற்போது சுற்றுமதில் தேவையில்லை என தெரிவித்து அனுப்புகின்றார். இவ்வாறு அசமந்த போக்காக பிரதேச செயலாளர் பதிலளிப்பதாக மேலும் ஒரு பொதுமகன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களினால் மேலதிக அரசாங்க அதிபரிடம் முறைப்பாடோன்றும் செய்யப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தினை பெற்றுக்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் இவ்வாறு அசமந்த போக்காக செயற்படுவது சரியா மாவட்ட அரசாங்க அதிபரே இது உங்களின் கவனத்திற்கு.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0