Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

குளவி கொட்டுக்கு இலக்காகி 05 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…!!

March 14, 2018 7:22 AM
9 0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் தோட்ட தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி, பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று (14) காலை 09.45 மணி அளவில் இடம் பெற்றதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாரளர் ஏ.எஸ்.கே. ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காயங்களுக்கு உள்ளன 05 தொழிலாளர்களுள் ஒரு பெண் தொழிலாளர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதோடு, ஏனைய மூன்று பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0