Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கிருஷ்ணர் பிறந்த இடம் சுற்றுலா தலமாக்கப்படும்: உ.பி. சுற்றுலாத்துறை..!!

July 16, 2017 6:05 PM
2 0

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் பகவான் கிருஷ்ணர் பிறந்தார் என புராணங்கள் கூறுகின்றன. அவரது இளமைக் காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கொண்டு மதுராவில் சுற்றுலா தலம் அமைக்கப்படும் என மாநில சுற்றுலாத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தின் வரைபடத்தை ஆய்வு செய்துவருவதாகவும், கிருஷ்ணர் வாழ்வில் நடந்த சம்பவங்களை கொண்டு சுற்றுலா தலமாக மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகையில், ’’பகவான் கிருஷ்ணர் வாழ்ந்தபோது நிலவிய சூழலை முழுமையாக கொண்டு வரவுள்ளோம். தேவகியும், வசுதேவரும் சிறையில் இருந்தபோது பிறந்தவர்தான் கிருஷ்ணர். அந்த பகுதியில் செயற்கை முறையில் யமுனை நதியை அமைக்க திட்டமிடப்ப்ட்டுள்ளது.” என தெரிவித்துள்ளனர்.

மேலும், கிருஷ்ணர் வாழ்வில் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளை கண்முன்னால் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை எடுத்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அதற்கான பணிகள் முடிந்துவிடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0