Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வேப்பிலை சாறு சாத்தும் நிகழ்வு

July 8, 2017 9:50 PM
3 0
கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வேப்பிலை சாறு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு - கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் கும்பாபிசேகத்தினை முன்னிட்டு வேப்பிலை சாறு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றுள்ளதுடன், இதன்போது விசேட பூஜைகள் நடத்தப்பட்டு பரிபாலன மூர்த்திகளுக்கும் மூலமூர்த்தியாகிய பத்திரகாளியம்மனுக்கு வேப்பிலைச்சாறு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் தொன்மை பொருந்தியதும் கிராமிய வழிபாட்டு முறைகளையும் கொண்ட கிரான்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய கும்பாபிசேகத்தின் போது கும்பாபிசேக கிரியைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளுக்கு வேப்பிலைச்சாறு சாத்தியுள்ளனர்.

மேலும், நாளை காலை சுபவேளையில் அம்பாளுக்கு மஹா கும்பாபிசேகம் வெகு சிறப்பாக நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0