Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கேரளா: பஸ்சில் கடத்திய ரூ. 10 கோடி தங்கம் பிடிபட்டது..!!

October 10, 2017 2:05 PM
1 0

பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்துக்கு தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், வயநாடு மாவட்டம், பெரிந்தல்மன்னா பகுதியில் உள்ள தோல்பெட்டி சோதனைச் சாவடியாக வந்த வாகனங்களை அதிகாரிகள் இன்று தீவிரமாக சோதனையிட்டனர்.

அப்போது, பெங்களூரில் இருந்து வந்த ஒரு பஸ்சில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை கடத்திவந்த ஆறு பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். கோழிக்கோடு பகுதியில் உள்ள ஒருவரிடம் ஒப்படைப்பதற்காக இந்த தங்கத்தை கடத்தி வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0