Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கொட்டகலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

September 23, 2017 10:26 AM
4 0
கொட்டகலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

“நான் சூழலை பாதுகாக்க விரும்பவில்லை, மாறாக பாதுகாப்பான சூழல் உள்ள உலகையே உருவாக்க விரும்புகின்றேன்” எனும் தொனிப்பொருளில் கொட்டகலையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று கொட்டகலை நகரம் முழுவதும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், பிரதான வீதியின் இருமருங்கில் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதோடு, டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமும், வீதி நாடகமும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, கொட்டகலை பிரதேச பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸார் ஆகியோர் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0