Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

குஜராத் மாநிலத்தை நெருங்கும் ஒக்கி புயல் – இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது..!!

December 5, 2017 6:35 PM
1 0

அரபிக்கடலில் உருவான ஒக்கி புயல் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதால் அங்கு மின் வினியோகம் தடைப்பட்டுள்ளது. சீரமைப்பு மற்றும் மீட்பு பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி தற்போது குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்ந்துவரும் ஒக்கி புயல் இன்று மாலை நிலவரப்படி குஜராத்தின் சூரத் நகரில் இருந்து சுமார் 390 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரத் தொடங்கும் ஒக்கி புயல் மகாராஷ்டிர மாநில கடலோர பகுதி மற்றும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரையொட்டியுள்ள கடலோரப் பகுதிக்கு இடையே இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குஜராத் கடலோரப் பகுதியை கடக்கும்போது ஒக்கி புயலின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டராகவும், தெற்கு குஜராத் பகுதியை தாக்கும்போது சுமார் 70 கிலோ மீட்டராகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0