Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

காங்கிரஸ் குழுமத்தில் நுழைந்தார் நடிகை ரம்யா!

October 12, 2017 2:30 PM
2 0
காங்கிரஸ் குழுமத்தில் நுழைந்தார் நடிகை ரம்யா!

காங்கிரஸின் சமூக வலைத்தள குழு தலைவராக, பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் இக் குழுவிற்கு தீபந்தர் சிங் ஹூடா என்பவர் தலைவராக செயற்பட்டு வந்த நிலையில், தற்போது ரம்யாவை நியமித்துள்ளதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளார்.

கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சி மறுசீரமைப்பு பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே இந்த நியமனம் அமைந்துள்ளதென காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0