Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தேசிய சுகாதார தின நிகழ்வு

October 10, 2017 4:53 AM
1 0
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தேசிய சுகாதார தின நிகழ்வு

கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் தேசிய சுகாதார தின நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளதுடன், சுகாதார தினத்தையொட்டி நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வைத்திய துறையில் அளப்பரிய சேவையாற்றிய கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், சிறப்பு நிகழ்வாக வைத்தியசாலைக்கான புதிய ஆளணி மாற்ற கட்டளை கோபாலரெத்தினத்தினால் (மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதி அமைச்சு) வைத்திய அத்தியட்சகர் ஆர்.முரளீஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்விற்கு அதிதிகளாக வைத்தியர் எஸ்.தங்கவடிவேல் (மகப்பேற்று நிபுணர்), எம்.கோபாலரெத்தினம் (மேலதிக பணிப்பாளர் நாயகம் நிதி அமைச்சு), வி.பிரபாகரன் (அதிபர் உவெஸ்லி உயர்தர பாடசாலை) ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0