Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கலிபோர்னியாவில் விமான விபத்தில் ஒருவர் பலி – விபத்தின் காரணம் என்ன?

July 15, 2017 1:30 PM
2 0
கலிபோர்னியாவில் விமான விபத்தில் ஒருவர் பலி – விபத்தின் காரணம் என்ன?

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சான் கெப்ரியல் வெலி விமானநிலையத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் விபத்துக்குள்ளான இந்த விமானம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸார், குறித்த விமானம் எல் மொன்ட்டே பகுதியில் இருந்து புறப்பட்டபோதே விபத்திற்குள்ளானதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விபரங்கள் விசாரணையின் பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0