Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கருணாநிதியுடன் சந்திப்பு; அரசியல் சாயம் பூசாதீர்; சரத்குமார்

November 13, 2017 2:05 AM
1 0
கருணாநிதியுடன் சந்திப்பு; அரசியல் சாயம் பூசாதீர்; சரத்குமார்

திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்ததற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், திமுக தலைவர் கருணாநிதியை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில், கருணாநிதியுடனான சந்திப்பு புகைப்படத்தை ஒன்றையும் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், அரசியலுக்கு வந்த பிறகு என்ன செய்தாலும், அதில் அரசியல் சாயமே பூசப்படுகிறது என்றும், இரண்டு வாரத்திற்கு முன்பு நடந்த இந்த நெகிழ்ச்சியான சந்திப்பிற்கு தயவு செய்து அதே சாயம் பூச வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0