Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கனடாவில் தீப்பிடித்து எரிந்த Party Bus..!! (வீடியோ)

November 21, 2017 5:00 AM
1 0

கனடாவின் வான்கூவர் மாகாணத்தில் Party Bus ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

கடந்த சனிக்கிழமை(18-11-2017) உள்ளூர் நேரப்படி இரவு பத்து மணியளவில் Downtown- Granville பகுதியிலேயே இந்த விபத்து நடந்துள்ளது.

இச்சம்பவத்தை நேரில் கண்ட மக்கள், அவர்கள் எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வேகமாக பரவவிட்டுள்ளனர்.

பேருந்தின் பின் பகுதியில் பிடித்த தீ பின்னர் முன் பகுதிகளுக்கு பரவியது இந்த வீடியோக்களின் மூலம் தெரியவந்துள்ளது.

உடனடியாக விரைந்து வந்த 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லையென்றாலும், விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என தீயணைப்பு பிரிவு அதிகாரி ஜான் கூறியுள்ளார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0