Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கட­லுக்கு சென்ற மீன­வர்கள் நால்­வரை காண­வில்லை.!!

December 5, 2017 6:13 AM
1 0

சீரற்ற கால­நிலை கார­ண­மாக ‘செனுரி துவதருசி புதா’ என்ற பெயர் கொண்ட படகில் சென்ற மீன­வர்கள் நான்கு பேரே காணாமல் போயுள்­ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து படகில் காணாமல் போயுள்ள மீன­வர்கள் தொழி­லுக்கு சென்­றுள்­ளனர். கடந்த 29 ஆம் திகதி முதல் பட­குடன் இருந்த தொடர்பு நின்று போயுள்­ள­தாக துங்­கல்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

கடற்­கரை வீதியைச் சேர்ந்த ஸ்டென்லி ரொட்­ரிகோ (படகு ஓட்­டுநர்) , குடா­பா­டுவ பிர­தே­சத்தைச் சேர்ந்த நெல்சன் ரொட்­ரிகோ, அஜித் குமார மற்றும் பல­கத்­துறை பிர­தே­சத்தைச் சேர்ந்த லக்மால் ரொட்ரிகோ ஆகியோரே இந்த படகில் தொழிலுக்காக சென்றவர்களாவர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0