Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

கடற்படை புலனாய்வு பொறுப்பதிகாரி ஊர்காவற்துறைக்கு மாற்றம்

September 16, 2017 11:13 AM
2 0

இலங்கை கடற்படையின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியான கெப்டன் எஸ்.எம்.ஜே.டி நிஸ்ஸங்க ஊர்காவற்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நிஸ்ஸங்க என்பவர் கடற்படை புலனாய்வுப் பிரிவின் சிறந்த புலனாய்வு அதிகாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பதிலாக புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கெப்டன் எல்.ஏ.பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடற்படை கப்பல்களில் பணியாற்றிய அதிகாரியாவார். இது சாதாரண இடமாற்றமே என நிஸ்ஸங்கவின் இடமாற்றம் குறித்து கடற்படையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாகல அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0