Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஏ.ஆர்.வி. தடுப்பூசி வசதிகளை நெடுந்தீவுக்கும் ஏற்படுத்துங்கள்

November 21, 2017 3:43 AM
1 0
ஏ.ஆர்.வி. தடுப்பூசி வசதிகளை நெடுந்தீவுக்கும் ஏற்படுத்துங்கள்

நெடுந்­தீவு பிர­தேச ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் 3 மாதங்­க­ளுக்கு முன்­னர் முன்­வைக்­கப்­பட்ட நெடுந்­தீவு வைத்­தி­ய­சா­லைக்கு ஏ.ஆர்.வி. தடுப்­பூசி ஏற்­றும் வசதி ஏற்­ப­டுத்தித் தர­வேண்­டும் என்ற கோரிக்கை இன்­று­வரை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என சுட்­டிக்­காட்­டப்­ப­ட்டது.

நெடுந்­தீ­வுப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்­கான ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி பிர­தேச செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் இடம்­பெற்­றது. இதன்­போதே மேற்­படி விட­யம் சுட்­டிக்காட்டப் பட்டது.

வேலணை, ஊர்­கா­வற்­றுறை வைத்­தி­ய­சா­லை­க­ளில் இருக்­கும் ஏ.ஆர்.வி. தடுப்­பூ­சி­யா­னது நெடுந்­தீவு வைத்­தி­ய­சா­லை­யில் இல்­லா­த­மை­யால் அதற்­காக படகு மூலம் அலைய வேண்­டிய நிலை காணப்­ப­டு­கின்­றது.

தீவில் வாழும் 5 ஆயி­ரம் மக்­களுக்கான ஒரே ஒரு வைத்­தி­ய­சா­லைக்­கும் அதனை வழங்­குங்­கள் எனக் கோரிக்கை விடப்­பட் டது.

கோரிக்கை விடுக்­கப்­பட்டு 3 மாதங்­கள் கடந்­தும் அதே­ நி­லமை தொடர்­வது குறித்து வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சும் பிராந்திய சுகா­தார மருத்­துவ அதி­கா­ரி­யும் கவ­னம் செலுத்த வேண்­டும் என மக்கள் வலியுறுத்தி­னர்.

இது தொடர்­பில் மாவட்ட சுகா­தார சேவைப் பணிப்­பா­ளர் மருத்­து­வர் நந்­த­கு­மா­ரு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது,

ஏ.ஆர்.வி. மருந்து ஏற்­றும்­போது ஒரு சில­ருக்கு ஒவ்­வாமை ஏற்­ப­டு­வ­தும் இயல்பு. அவ்­வாறு ஒவ்­வாமை ஏற்­பட்­டால் அவர்­களை உட­ன­டி­யாக விடு­தி­யில் வைத்து சிறப்பாகப் பரா­ம­ரிக்க வேண்­டும். அதற்­கென பயிற்­றப்­பட்ட குறிப்­பிட்­ட­ளவு தாதி­ய­ரும் வேண்­டும்.

இவ்­வாறு போதிய தாதி­யர் இன்மை கார­ண­மா­கவே முன்­னர் குறித்த மருந்து அந்த வைத்­தி­ய­சா­லை­யில் பாவ­னை­யின்றி காணப்­பட்­டது.

இருப்­பி­னும் தற்­போது தாதி­யர் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே குறித்த வச­தி­கள் உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்­தப்­ப­டும் என்­றார்.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0