Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

எவரும் உரிமை கோரமுடியாது! நல்லூரில் சம்பந்தன் சூளுரை

February 6, 2018 8:28 PM
8 0

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் தலைவர்களுடன், சர்வதேச நாடுகளுடன் பேசிய ஒரே கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்துள்ளதாக அதன் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதனை எவரும் மறுக்க முடியாது. அதற்கு எவரும் உரிமை கோர முடியாது. வேறு எவரும் பேசக்கூடிய நிலையிலும் இருந்திருக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். நல்லூரில் இன்று இடம்பெற்ற தேர்தல பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் மக்களின் எந்தவொரு பிரச்சினை தொடர்பில் பேசக்கூடிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். அந்த நிலைமை தொடர வேண்டும். அந்த நிலைமை பலமடைய வேண்டும்.

இன்று நாங்கள் சர்வதேசத்தின் மதிப்பை நாங்கள் பெற்றிருக்கின்றோம். சர்வதேச சமூகத்தின் கருத்தின் அடிப்படையில், தமிழ் மக்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்ற நிலையை நாங்கள் அடைந்திருக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0