Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

எரிபொருள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 33 பேர் பலி

November 13, 2017 2:17 AM
1 0
எரிபொருள் ரெயில் தடம் புரண்ட விபத்தில் 33 பேர் பலி

காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிரிக்காவின் மூன்றாவது பெரிய நாடான காங்கோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது..

காங்கோவின் லுபும்லாஷி நகரில் இருந்து லுயினா நகருக்கு சரக்கு ரெயில் 13 பெட்டிகளில் கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.

இந்த சரக்கு ரெயிலில் பொதுமக்களும் சட்டவிரோதமாக பயணித்துள்ளனர். அந்த ரெயில் லுபுடி என்னுமிடத்தில் சரிவில் ஏறியபோது எதிர்பாராத விதமாக தடம்புரண்டது.

தடம்புரண்ட அந்த ரெயில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்து, தீப்பற்றியது. இந்த விபத்தில் அந்த ரெயிலில் பயணம் செய்த 33 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது சரக்கு ரெயில் என்பதால் அதில் பயணித்த அனைவரும் சட்டவிரோத பயணம் செய்ததாகவே கருதப்படுவர் என மூத்த ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஒரு சரக்கு ரெயில் தடம்புரண்ட விபத்தில் 74 பேர் உயிரிழந்ததோடு 174 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: kathiravan.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0