Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

உள்ளூராட்சி தேர்தல்: மட்டக்களப்பில் அதி நீளமான வாக்குச்சீட்டு…!!

February 8, 2018 3:40 PM
13 0

உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் மூதூர் ஆகிய இரு இடங்களிலேயே அதி நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மிகச் சிறியதான வாக்குச் சீட்டு பாணந்துறை நகர சபைக்காக அச்சிடப்பட்டுள்ளது.

அதி நீளமானது வாக்குச்சீட்டு என்ற அடிப்படையில் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகர சபைக்காக 11 அரசியல் கட்சிகள் 5 சுயேட்சைக் குழுக்கள் உள்ளிட்ட 16 போட்டித் தரப்புக்களை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும், அதேபோல மூதூரில் 14 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயேட்சைக் குழுக்களுடன் 16 போட்டித் தரப்பாரை உள்ளடக்கிய வாக்குச் சீட்டும் அச்சடிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு 33 உறுப்பினர்களும் மூதூர் பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0