Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள்…!!

February 13, 2018 9:29 AM
6 0

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளின் அடிப்­ப­டை­யில் நாங்­கள்­ தான் “கிங்­மேக்­கர்­கள் என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் மேயர் திரு­மதி யோகேஸ்­வரி பற்­கு­ண­ராஜா, சிறி­தர் தியேட்­ட­ரில் யாழ்ப்­பாண நகர வர்த்­த­கர்­க­ளு­டன் நடந்த கலந்­து­ரை­யா­ட­லில் தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பாண நக­ரத்­தில் உள்ள முக்­கி­ய­மான சில வர்த்­த­கர்­கள் (பத்­துக்­கும் குறை­வா­னோர்) ஈ.பி.டி.பியின் செய­லர் டக்­ளஸ் தேவா­னந்­தா­வால், சிறி­தர் தியேட்­ட­ருக்கு கலந்­து­ரை­யா­ட­லுக்கு வரு­மாறு அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர்.

யாழ்ப்­பாண நகர வர்த்­த­கர்­கள் யாழ்ப்­பாண நக­ரத்­தின் அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­ முன்­மொ­ழி­வு­களை தமக்­குச் சமர்­பிக்க வேண்­டும் என்று இந்­தச் சந்­திப்­பில், டக்­ளஸ் தேவா­னந்தா கோரி­யுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் ஆட்சி அமைப்­ப­வர்­க­ளி­டம் அந்­தத் திட்ட முன்­மொ­ழி­வு­க­ளைச் சமர்­பித்து தாம் ஆத­ரவு வழங்­கு­வோம் என்­றும், அத­னைச் செயற்­ப­டுத்­தாத பட்­சத்­தில் ஆத­ரவை விலக்­கிக் கொள்­வோம் என்­றும் வர்த்­த­கர்­க­ளி­டம் டக்­க­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பெரிய தலை­வர் என்­றும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் கெட்­டிக்­கா­ரன் என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

அதே­வேளை, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார், சம்­பந்­தன், சுமந்­தி­ரனை வெளி­யேற்­றி­னால் இணை­யத் தயார் என்று தெரி­வித்­தமை தவ­றா­னது என்­றும் சந்­திப்­பில் கூறி­யுள்­ளார்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0