Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு

February 7, 2018 9:07 AM
7 0
உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் இன்று காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதன் பின்னர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் கூறியுள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0