Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

ஈரானில் விமான விபத்து – 11 பேர் பலி..!!

March 12, 2018 4:00 AM
6 0

ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர்.

துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இஸ்தான்புல் நோக்கி சென்றது. அதில் 11 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த விமானம் ஈரான் நாட்டு மலைப்பகுதியில் சென்றபோது கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகினர் எனவும், ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, கடந்த மாதம் ஈரானில் நடந்த விமான விபத்தில் 66 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0