Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இ.தொ.காவின் தலைவருக்கு பிரதி அமைச்சுப்பதவி?

February 15, 2018 8:58 AM
8 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கத்திற்கு பிரதி அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சராக பதவிப்பிரமானம் செய்து கொண்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்திருந்தார்கள்.

இதில் சமகால அரசியல் நிலவரம் பற்றியும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் ஆராயப்பட்டதுடன், ஜனாதிபதி மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கப் போவதாக தொண்டமான் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருக்கு பிரதி அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0