Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்புவதாக பாகிஸ்தான் பெண் செய்த மோசமான செயல்

July 13, 2018 3:06 AM
2 0

கனடாவுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ விசேட குற்ற விசாரணை பொலிஸ் அதிகாரிகளினால் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையர்களை மேற்படிப்புக்காக கனடா அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் 1579650 ரூபாய் பணம் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை 11.45 மணியளவில், கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின், டெம்பல் வீதியில் வைத்து குறித்த பெண் கைது செய்யயப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதான பாகிஸ்தான் நாட்டு பெண் என கண்டறியப்பட்டுள்ளது.

இன்றை தினம் குறித்த பெண் கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0