Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு..!! (படங்கள்)

October 10, 2017 7:49 AM
1 0

இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் விஷேட அமர்வு நேற்றைய தினம் (09/10) திங்கட்கிழமை மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.

இலங்கையில் நடைபெற்ற மக்கள் தொகை மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர்களின் 12வது மாநாட்டில் கலந்துகொண்ட ஆசியாவில் உள்ள 30 நாடுகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இளைஞர் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக விஷேட அமர்வு நடைபெற்றது.

இவ் விஷேட அமர்வில் மக்கள் தொகை மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஆசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் உபதலைவரும் அவுஸ்ரேலியா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினருமான ஆன் சுதுமலிஸ் இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன, யாழ்.மாவட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் எரிந்த வெலியங்கே, ஆசியாவில் உள்ள 30 நாடுகளை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இளைஞர் கழக சம்மேளன செயலாளர் உப்புள் சந்தறுவன், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதாரம்: athirady.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0