Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் விஷேட அமர்வு

October 10, 2017 10:03 AM
5 0
இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் விஷேட அமர்வு

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின் விஷேட அமர்வு நேற்று மஹரகமவில் அமைந்துள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற மக்கள் தொகை மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் 12ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட ஆசியாவில் உள்ள 30 நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வந்துள்ளனர்.

குறித்த 30 நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை இளைஞர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக இந்த விஷேட அமர்வு நடைபெற்றுள்ளது.

இதில் மக்கள் தொகை மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான ஆசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் உபதலைவரும் அவுஸ்திரேலியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆன் சுதுமலிஸ், இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் நாயகம் எரிந்த வெலியங்கே, ஆசியாவில் உள்ள 30 நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை இளைஞர் கழக சம்மேளன செயலாளர் உப்புள் சந்தறுவன், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0