Receive up-to-the-minute news updates on the hottest topics with NewsHub. Install now.

இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

July 13, 2017 9:02 AM
3 0
இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையில் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

கிளிநொச்சி - இராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலையின் ஆசிரியர் விடுதி திறப்பு விழாவும் மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் இ.ரவீந்திரன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆசிரியர் விடுதி திறந்து வைக்கப்பட்டது.

இதில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டடத்தினை திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாகாண மட்ட போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: tamilwin.com

சமூக வலைப்பின்னல்களில் பகிர்ந்து:

Comments - 0